மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

விலைவாசி உயர்வை சமாளிக்க ஏதுவாக ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம், முதல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2வது அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய அகவிலைப்படி உயர்வு ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலால் பணியில் இருக்கும் மற்றும் பணி ஓய்வு பெற்றோர் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day